
முட்டை இறக்குமதிக்காக சுமார் 16 பேருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தமக்கு தெரியவந்ததாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்தார்.
மேலும், முட்டைகளை இறக்குமதி செய்தால், இறக்குமதி செய்யப்படும் முட்டையை விட உள்ளூர் முட்டைகள் குறைவாகவே வழங்கப்படும் என்றும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ரூ. 25 ரூபாய் இற்கு வழங்கப்பட்டால், உள்ளூர் முட்டையை ரூ. 20 இற்கு வழங்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)