
மொனராகலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) சிசிர குமார, கஞ்சா செடிகளுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் நேற்று (08) இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது 350 உலர்ந்த கஞ்சா செடிகள் மற்றும் உலோகங்களை தேடும் ஸ்கேனர் இயந்திரத்தையும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றிய கஞ்சாவின் எடை சுமார் 15 கிலோகிராமத் என அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 04 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மொனராகலை காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.