
10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவ்பத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட வேளையில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சந்தேக நபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் எனவும், 10 வயதுடைய பெண் குழந்தையின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி வகுப்பின் போது பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும், அன்றைய தினம் வகுப்பிலிருந்து வீடு திரும்பியதும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து ஹொரவ்பத்தனை பொலிஸார் சந்தேகநபரை நேற்று (08) கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)