
இந்நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக சீனா 10.06 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
இதன்படி, நெல் விவசாயிகளுக்கான இலவச விநியோகத்தை இன்று முதல் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், எரிபொருள் இருப்புக்களை விசேட வவுச்சர் மூலம் ஆன்லைனில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அறுவடைக்கு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 15 லிட்டர் டீசல், 2 ஹெக்டேருக்கு 30 லிட்டர் டீசல் வழங்கப்படும். (யாழ் நியூஸ்)