
இலங்கையில் யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சிங்கப்பூரின் சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (06) தெரிவித்தார்.
இலங்கையில் பத்திரிகை மற்றும் ஒலிபரப்பு ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் உள்ளன, ஆனால் சமூக ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் இல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், சிங்கப்பூரின் சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரதி தமக்கு கிடைத்துள்ளதாகவும், இலங்கைக்கு ஏற்ற சட்டங்கள் அடங்கிய சட்டமூலத்தை எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பல்வேறு ஊடகங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)