தமிழர்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழர்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு!

வடக்கில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழர்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்ட 100 ஏக்கர் காணிகளை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்டச் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கில் உள்ள தமிழர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படும் தமது தனியார் காணிகளை கையளிப்பதாகும். அடையாளம் காணப்பட்ட காணிகளில் நடத்தப்பட்ட முகாம்களை வேறு இடங்களில் நிறுவி அந்த காணிகளின் முந்தைய உரிமையாளர்களுக்கு மாற்றுமாறு திரு.சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த காணிகளின் உரிமை மாவட்ட செயலாளர்கள் ஊடாக மக்களிடம் கைமாற்றப்பட உள்ளது. பெப்ரவரி 11ஆம் திகதிக்கு முன்னர் இந்தக் காணிகளை மக்களுக்கு விடுவிக்குமாறும் திரு.சாகல ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திரத்துடன் இணைந்து இந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்றும் தமிழர்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் இன்னும் காணிகள் இருப்பின் சட்டரீதியான நிலையையும் கண்டறிந்து கையளிப்பதாகவும் திரு.சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.