
இதன்படி, வாகனங்களைப் பதிவுசெய்தல் மற்றும் இடமாற்றம் செய்யும் போது இலக்கத் தகட்டின் மாகாணத் தன்மை நீக்கப்படும் என ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையில் ஒரு வாகனம் பல தடவைகள் விற்பனை செய்யப்படுவதனால் புதிய இலக்கத் தகடு அச்சிடப்பட்ட போதும் சாரதிகள் அதனை பெற்றுக் கொள்ள வராத சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அதற்கமைய இந்த செலவை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)