உசைன் போல்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்து காணாமல் சென்ற ரூ. 400 கோடி!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

உசைன் போல்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்து காணாமல் சென்ற ரூ. 400 கோடி!

ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்த 403 கோடி ரூபாய் காணாமல் போயிருக்கிறது.

மின்னல் மனிதர்

ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தவர் ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட்.

அதேபோல் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டங்களில் தொடர்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே வீரரும் இவர்தான். 11 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற போல்ட், கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்த நிலையில், இன்றுவரை உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

போல்ட்டின் முதலீடு

உசைன் போல்ட் போட்டிகளில் வெற்றி மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைத்த தனது வருமானத்தின் பெரும் பகுதியை, ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

இந்த நிலையில் அவர் முதலீடு செய்திருந்த நிறுவனத்தில் உள்ள தனது கணக்கில் இருந்து 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளது. அதாவது இலங்கை மதிப்பில் 403 கோடியை அவர் இழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது கணக்கில் வெறும் 12 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மட்டுமே இப்போது உள்ளது.

மோசடி

ஊழியர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டதால் முதலீட்டாளர்களின் பணம் பாதிக்கப்பட்டதாகவும், இந்த விடயத்தை அமலாக்கத்திற்கு அனுப்பியதுடன், சொத்துக்களை பாதுகாக்க நெறிமுறைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உசைன் போல்ட்டின் வழக்கறிஞர் கூறுகையில், 'இந்த கணக்கு போல்ட்டின் ஓய்வு மற்றும் வாழ்நாள் சேமிப்பின் ஒரு பகுதியாகும். நிறுவனம் அந்த பணத்தை திருப்பி தராவிட்டால் நாங்கள் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வோம். இது ஒரு பெரிய ஏமாற்றம், போல்ட் தனது பணத்தை திரும்பப்பெற்று நிம்மதியாக வாழக்கூடிய வகையில் இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்' ஏன் அவர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.