உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கைக்கு கிடைத்த இடம்!


உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன், 79 ஆம் இடத்தில் பதிவாகியுள்ளது.


எனினும், தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்திலுள்ளது.


132 நாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


அதில், 68.37 சதவீதத்துடன், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.


சுவிட்ஸர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து முதலான நாடுகள், முறையே இரண்டு முதல் ஐந்தாம் இடம்வரை தரப்படுத்தப்பட்டுள்ளன.


41.52 சதவீதத்துடன், 91 ஆவது இடத்தில் இந்தியாவும், 34.44 சதவீதத்துடன் 110 ஆவது இடத்தில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.


உலக அறிவுச் சுட்டெண் பட்டியலைப் பார்வையிட www.knowledge4all.com என்ற இணையத்தளத்துக்குப் பிரவேசிக்கவும்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.