இரண்டு வயதேயான பெண் குழந்தை மீது பாலியல் சேட்டை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டு வயதேயான பெண் குழந்தை மீது பாலியல் சேட்டை!


இரண்டு வயது மற்றும் 08 மாதங்களேயான பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு பாலியல் சேட்டை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனையே ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (28)  உத்தரவிட்டார்.


குறித்த இளைஞன், சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாதங்களேயான பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்துள்ளார். அத்துடன், அந்தக் குழந்தை மீது பாலியல் சேட்டையையும் விட்டுள்ளார்.


இதனை அவர்களது உறவினரான பெண்ணொருவர் அவதானித்து, குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்


இது தொடர்பில், தனது சகோதரனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.