
கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை இன்று (29) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், 22 கரட் தங்கப்பவுண் ஒன்று ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில், தங்க விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு பிரதான காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.