
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டின் கடனாளிகளின் உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சும் மத்திய வங்கியும் இந்தியா மற்றும் சீனாவுடன் கலந்துரையாடி வருவதாகவும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதற்கான அனுமதி கிடைக்குமென நம்புவதாகவும், இதன்மூலம் தங்களால் நிதியினை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்).