
தலைநகர் டாக்காவில் இருந்து உத்தரா முதல் அகர்கான் பகுதி வரை இந்த மெட்ரோ ரயில் அமைப்பு கட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முழு கட்டுமானமும் 2030 க்குள் முடிக்கப்படும் என்றும் அதன் முதல் பகுதி 12 கிலோமீட்டர் எனவும் கூறப்படுகிறது.
டாக்காவில் இன்று மெட்ரோ வழித்தடத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா, அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும் முதல் அதிவேக ரயில் சேவை வங்கதேசத்தின் மாபெரும் சாதனை என்று கூறினார். (யாழ் நியூஸ்)





