
அதற்கமைய, சகல பிரஜைகளும் தமது வீடுகளிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் நுளம்புகள் பெருகும் இடங்களைத் தேடி இந்த இரண்டு நாட்களிலும் அவற்றை அகற்றுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொள்கிறது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை 75,434 சந்தேகத்திற்கிடமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்தில் பதிவாகியிருந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
