சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு சென்ஸர் மின்குமிழ்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சாய்ந்தமருதை ஒளியூட்டும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு இந்த மின்குமிழ்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அஸீமின் முயற்சியால், 10 சென்ஸர் மின்குழிகள் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளித்து, அதனை தேவையான இடங்களில் பொருத்தியும் கொடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம், மரைக்காயர்களான ஏ.சீ.எம்.இக்பால், எம்.ஐ.உதுமாலெப்பை (எவசைன்), நிர்வாக உத்தியோத்தர் எம்.எஸ்.எம்.றசீது ஆகியோரும் கலந்து கொண்டனர்.