
நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அனுகல் படுகையின் கீழ் பத்து வருடங்களுக்கு அரசாங்கத்திடம் கையகப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த போதிலும், 2022 ஜனவரி 31 ஆம் திகதி வரையில் அவ்வாறான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறான இணக்கப்பாடு எட்டப்பட்டால் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை பத்து வருடங்களுக்கு அரசாங்கத்தின் வசம் இருக்கும் எனவும், அந்த வைத்தியசாலை இலங்கை வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ. 101 கோடி இனை செலுத்தியதன் பின்னர் அது சொந்தமாக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கையில் காட்டப்பட்டுள்ளபடி, நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் செலவுகளை ஈடுகட்ட சுகாதார அமைச்சு மேற்படி பணம் செலுத்தியுள்ளதாகவும், அவ்வாறான எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)