அமரிக்காவில் இருந்து வந்த நபர் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமரிக்காவில் இருந்து வந்த நபர் கொலை!

அமெரிக்காவில் கடற்படை மின் பொறியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற 72 வயதுடைய முதியவர் படுகொலை செய்யப்பட்டு மல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள அவரது தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக மல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மல்சிறிபுர ரெஸ்வத்த பிரதேசத்தில் வசித்து வந்த ரன்படி தேவயலாகே சித்ரானந்த ஜயரத்ன என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் என்பதுடன் அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 2019 இல் இலங்கைக்கு வந்துள்ளார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்று இலங்கைக்கு வந்த அவர், மல்சிறிபுர ரெஸ்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் காலத்தை கழித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட நபர் இலங்கையில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை பேணி வந்துள்ளதுடன், கடந்த நாளிலிருந்து அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால், மாலம்பே பிரதேசத்தில் வசிக்கும் அவரது பெரியம்மாவின் மகன் காணாமல் போனமை தொடர்பில் மல்சிறிபுர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அநுராதபுரத்திற்கு சுற்றுலா செல்வதாக வீட்டின் உரிமையாளர் கூறிவிட்டு கடந்த வாரம் முதலாம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாக மல்சிறிபுர வீட்டில் பணிபுரிந்த நபர் தெரிவித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த பொலிஸார், நேற்று (23) வீட்டுக்குச் சென்று மீண்டும் விசாரணை நடத்தியபோது, ​​வீட்டின் அறையொன்றில் உள்ள மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெல்லவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மிலிந்த என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குருநாகல் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.உபுல் சந்தன அபேசிங்கவின் நேரடி வழிகாட்டலில் நேற்று மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் உத்தியோகபூர்வ பொலிஸ் நாயின் உதவியும் பெறப்பட்டது.

நாயின் தடத்தை பின்தொடர்ந்த பொலிஸார் ஓய்வுபெற்ற மின் பொறியியலாளர் இறந்து அவரது சொந்த தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டதுடன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்க, மல்சிறிபுர பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் அசோக பிரியந்த உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.