பிரித்தானிய புதிய பிரதமராக ரிஷி சுனக்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரித்தானிய புதிய பிரதமராக ரிஷி சுனக்!

அரசியலில் களம் காணும் முன்னர் ரிஷி சுனக் வெற்றிகரமான நிதியாளராக பணியாற்றி வந்தார்.

பிரித்தானியாவின் நிதியமைச்சராக பொறுப்பில் இருந்த ரிஷி சுனக் திறம்பட சேவையாற்றினார்.

பொருளாதார நிபுணரான ரிஷி சுனக் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், சாதாரண பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரித்தானிய நிதியமைச்சரான ரிஷி சுனக், நாட்டின் 57வது பிரதமராக பொறுப்பேற்கவிருக்கிறார். அரசியலில் களம் காணும் முன்னர் ரிஷி சுனக் வெற்றிகரமான நிதியாளராக பணியாற்றி வந்தார்.

பிரபலமான Goldman Sachs வங்கி உட்பட பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ரிஷி சுனக் பின்னர் முதலீடு நிறுவனம் ஒன்றை நிறுவினார். கொரோனா பெருந்தொற்றால் உலக பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போன காலகட்டத்தில், பிரித்தானியாவின் நிதியமைச்சராக பொறுப்பில் இருந்த ரிஷி சுனக் திறம்பட சேவையாற்றினார்.

தற்போது, நாட்டின் பிரதமராக பொறுப்புக்கு வரவிருக்கும் ரிஷி சுனக் பிரித்தானிய பொருளாதாரத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 31ம் திகதி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், புதிய பிரதமரான ரிஷி சுனக் தமது நிதியமைச்சருடன் இணைந்து கடுமையான முடிவுகளை முன்னெடுப்பார் என்றே தெரியவந்துள்ளது. மேலும், புதிய நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவாரா அல்லது தற்போதைய நிதியமைச்சரான ஜெர்மி ஹன்ட் தொடர்வாரா என்பதும் உறுதியாகவில்லை.

இந்த நிலையில், பொருளாதாரம் தொடர்பில் இந்த வாரம் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், யுனிவர்சல் கிரெடிட் பயனாளர்கள் உட்பட மில்லியன் கணக்கானோர் தங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் யுனிவர்சல் கிரெடிட் பயனாளர்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்பட்டே வந்துள்ளது. இரண்டாவதாக, மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் பணவீக்கத்திற்கு ஏற்ப தங்கள் கொடுப்பனவுகள் உயருமா என்ற கவலையில் உள்ளனர்.

45 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த லிஸ் ட்ரஸ் அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிக்க மறுத்தது. ஆனால் ரிஷி சுனக் இந்த விவகாரத்தில் கண்டிப்பாக முக்கிய முடிவெடுப்பார் என்றே மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூன்றாவதாக, நேஷனல் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாறுதல் கொண்டுவரப்பட்டால், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஆண்டுக்கு 330 பவுண்டுகள் வரையில் சராசரியாக பலன்களைப் பெறுவார்கள்.

ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வந்த தேசிய காப்பீட்டில் 1.25 சதவீத புள்ளிகள் உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் ஹன்ட் தெரிவித்துள்ளார். இதனால் பிரித்தானியாவில் உள்ள சுமார் 28 மில்லியன் தொழிலாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக 330 பவுண்டுகள் ஆதாயம் பெறுவார்கள்.

இருப்பினும், ஆண்டுக்கு 12,570 பவுண்டுகளுக்கும் குறைவாக வருவாய் ஈட்டும் தொழிலாளர்களுக்கு இதனால் ஆதாயம் ஏதுமில்லை என்றே தெரியவந்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.