திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் - 2022: ரெஸா மற்றும் ஜன்னத் ஹுல் தங்கம் வென்று சாதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் - 2022: ரெஸா மற்றும் ஜன்னத் ஹுல் தங்கம் வென்று சாதனை!


திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் - 2022 (Open International Karate Championship) போட்டி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


Open International Karate Championship ஜுனியர் பிரிவில் காத்தா, குமிதே போட்டியில் எம்.ஆர்.எம். ரெஸா மற்றும் எம்.எஸ்.எம். ஜன்னத் ஹுல் ஆகியோர் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

International Martial arts Association இலங்கை கிளையின் தலைவர் பிரதம போதனாசிரியர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் பிரதிநிதியாக கலை கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில், பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனை சபைத் தவிசாளர் பேராசிரியர் ஏ. ஜவ்பர் மற்றும் விளையாட்டு ஆலோசனை சபை உறுப்பினர்களான விரிவுரையாளர்கள், விடுதிப் பணிப்பாளர் யூ.எல். மன்சூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.