டிசம்பர் முதல் மின்வெட்டு இல்லை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டிசம்பர் முதல் மின்வெட்டு இல்லை?

பலத்த மழை பெய்த காரணத்தால் நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு நிலக்கரி கிடைத்தால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மின்வெட்டு தேவைப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னக்க, தற்போது மின்சாரத் தேவை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த வாரம் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு இடம்பெறும் என்று அறிவித்திருந்த போதிலும் அந்த ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படவில்லை. 3ம் திகதியில் இருந்து இன்று வரை மின்வெட்டு இல்லை.

அதற்கு காரணம் நம்மிடம் இருக்கும் மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. எனவே, மின்வெட்டுக்கு அவசியம் ஏற்படவில்லை. 5ம் திகதி, வழங்கல் அதிகரித்துள்ளது.

தேவையான அளவை விட அதிகளவில் உற்பத்தி செய்யும் திறன் எங்களிடம் தற்போது உள்ளது. எனவே, இந்த நிலக்கரி பிரச்சினை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு வரவில்லை என்றால் ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது.

தேவையான அளவு தண்ணீர் இருந்தால், நிலக்கரி இருந்தால், வரும் டிசம்பர் மாதம் வரை. மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது” என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.