37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்ததன் காரணத்தை வெளியிட்ட அரசாங்கம்!
advertise here on top
advertise here on top

37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்ததன் காரணத்தை வெளியிட்ட அரசாங்கம்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் எவ்வித சலுகைகளும் இன்றி செயற்படுவார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கீழ் 20 அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரச நிறுவனங்களையும் செயற்படுத்த போதுமானதாக இல்லை என அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தம்முடைய கீழ் உள்ள 35 நிறுவனங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து நிறுவனங்களின் விவகாரங்களையும் தாம் மட்டும் கையாள்வது கடினம் என்றார். எனவே இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்தால் அந்த நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை அவர்களுக்கே வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தற்போதைய சூழ்நிலையில் நிறுவனங்களின் நிலையை மேம்படுத்த இது எங்களுக்கு உதவும். இதனையடுத்து புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சம்பளத்தின் கீழ் பணியாற்றுவார்கள். எனவே, அவை அரசுக்கு சுமையாக மாறாது,'' என விளக்கமளித்தார். 

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் என மொத்தம் 88 பேர் அமைச்சர்களுக்கு உரிய சம்பளம் வழங்கியிருந்தனர். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கு மேலதிக சம்பளம் அல்லது சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.