விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன் மாதிரிகள் ஏற்கனவே அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரிவின் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் திலக் சிறிவர்தன தெரிவித்தார்.
இதன்படி, ஆய்வு அறிக்கைகள் அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் தொடர்பில் வாடிக்கையாளருக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவை 0112 112 718 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவு பொதுமக்களைக் கோரியுள்ளது. (யாழ் நியூஸ்)