
கடந்த வாரம் காணாமல் போனதாக கூறப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
24 வயதுடைய மாணவரின் சடலம் கண்டி மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் யக்கலையை வசிப்பிடமாகவும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் 4 ஆம் வருட மாணவரும் ஆவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து பேராதனைப் பொலிஸார் குறித்த மாணவனைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செப்டம்பர் 16 ஆம் திகதி குறித்த மாணவர் எழுதிய கடிதம் அவரது தங்கும் விடுதியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் மரணத்திற்கான காரணம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)