WATCH: கைப்பை கொள்ளை முயற்சி; இளைஞர் ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: கைப்பை கொள்ளை முயற்சி; இளைஞர் ஒருவர் பலி!


கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தில் நேற்று (20) இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தியால் குத்தப்பட்டு 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் பையை திருட முற்பட்ட போது வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர்.


சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்த இருவர் சந்தேகத்திற்கிடமான பெண்ணை பிடிக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு பெண்ணை விடுவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


காயமடைந்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.