
சிறந்த விமான நிலையங்களில் விபத்துகள் மற்றும் மனித தவறுகள் நடக்கின்றன என்பது இது ஓர் உதாரணம் ஆகும்.
2022 செப்டெம்பர் 15 ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு புதிய ஶ்ரீலங்கன் எயார்லண்ஸ் விமானமான எயார்பஸ் ஏ330 4R-ALM விமானம் குறித்த தறிப்பிடத்தில் இருந்து இடமாற்றம் செய்யும் போது சர்வதேச விமான நிலையத்தில் விமான விபத்து பதிவாகியுள்ளது.
இடமாற்றம் செய்ய பயன்படும் வாகனம் குறித்த விமானத்தின் இஞ்சினை தாக்கியுள்ளது.
இந்த விபத்தினால் காயங்கள்/உயிர் இழப்பு இல்லை ஆனால் புதிய இஞ்சின் மாற்றப்படும் வரை 4R-ALM விமானம் இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)