17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பிரபல கிரிக்கெட் கேப்டனுக்கு பிடிவாரண்ட்!
advertise here on top
advertise here on top

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பிரபல கிரிக்கெட் கேப்டனுக்கு பிடிவாரண்ட்!

நேபாளம் கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்திப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி அளித்துள்ள பாலியல் பலாத்காரம் புகாரில் அவருக்கு காத்மாண்டு நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது.நேபாளம் அணிக்காக 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

தற்போது ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்திப் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் தான் சந்திப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் நண்பர் ஒருவர் மூலம் சந்திப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை எடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்திப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்திப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது அந்தப் பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று மருத்துவச் செக்கப்ளும் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சந்திப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஆனால் சந்திப் தற்போது நேபாளில் இல்லை. அவர் கடந்த 22ஆம் தேதி நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடான நேபால் தற்போது டி20 போட்டிகளில் ஒரு அளவு முன்னேறி வருகிறது நேபால் அணியின் கேப்டன் சந்திப்பு நல்ல திறமையான சுழற் பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்றவர்.

கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் நிலையில் தற்போது பாலியல் பலாத்காரம் புகாரில் சிக்கி இருப்பது ஒட்டுமொட்ட ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து நேபால் கிரிக்கெட் வாரியம் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.சந்திப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.