
பாலாவியில் இருந்து கல்பிட்டி நோக்கிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியானது மனித உரிமைகள் ஆணைக்குழு புத்தளம் கிளைக்கு சொந்தமானது எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஜீப் வண்டி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கல்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)



