
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காத்தாடி விழாவிற்கு இலங்கை பொலிஸார் இன்று (27) இடையூறு விளைவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்ட ஆர்வலர்கள் குழுவினால் காத்தாடி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முகம் பொறிக்கப்பட்ட காத்தாடி ஆர்ப்பாட்டக்காரர்களால் பறக்கவிடப்பட்டதையடுத்து பொலிஸார் எதிர்ப்புத் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)