
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட போது, கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் இருந்து வெளிநாட்டு மதுபான போத்தல் ஒன்றை திருடியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை 2022 ஆகஸ்ட் 24ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)