
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாலபே பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் (STF) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், திருடப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வலஸ்முல்லை, வீரகெட்டிய பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (20) சென்ற இளைஞன், வீட்டுக்கு எதிரே உள்ள வீதியில் காத்திருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதியொன்றைப் பற்றி விசாரிக்கும் போர்வையில் குறித்த இளைஞனை அணுகி அவரது சொத்துக்களை அபகரித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற மறுநாள் குறித்த இளைஞர் செய்த முறைப்பாட்டையடுத்து, மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். (யாழ் நியூஸ்)