
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்க அமைச்சரவை முன்னர் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், ஏற்கனவே பொது போக்குவரத்து சேவைகள் மீளமைக்கப்பட்டுள்ளமை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான அடிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு போதுமான கால அவகாசம் இருப்பதைக் கருத்திற்கொண்டு, குறித்த அமைச்சரவை தீர்மானத்தின்படி, இந்த சுற்றறிக்கையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் கீழே (சிங்கள மொழியில்), (யாழ் நியூஸ்)
