அவுஸ்திரேலியாவின் ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கத் தலைவராக ரிசா ஜமால் தெரிவு
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

அவுஸ்திரேலியாவின் ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கத் தலைவராக ரிசா ஜமால் தெரிவு

அவுஸ்திரேலியவில் இயங்கும் ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கத்தின் தலைவராக ரிசா ஜமால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


ரிசா ஜமால்

இவர், ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கம் (USMAA) மற்றும் சமூகத்தில் நன்கு அறிந்த நபராக, கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக மெல்போர்னில் வசிக்கிறார். அத்தோடு, சுமார் 30 வருட காலம் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் பல சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கத்துக்கு பக்கபலமாக இருந்து உதவியுள்ளார்.  

CIMA (UK) மற்றும் CA (Australia) உடன் செயற்படும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், இப்போது அவுஸ்திரேலியாவின் USMAA (ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்க) த்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்காவின் உயர்பீட உறுப்பினர் எம்.ரி.எம். றிஸ்வியும் கலந்து கொண்டார். (எம்.எஸ்.எம்.ஸாகிர்)
(யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.