
முன்னாள் ஜனாதிபதி தங்கியுள்ள விடுதியில் அவரது பாதுகாப்புக்காக சிவில் உடையில் தாய்லாந்து பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை என தாய்லாந்து செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
திரு கோத்தபாய ராஜபக்ச கடந்த வியாழன் இரவு சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் சென்றார். (யாழ் நியூஸ்)