
ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 87 இலிருந்து ரூ. 253 அதிகரிப்பை தொடர்ந்து, நேற்று புதிய விலை லிட்டருக்கு ரூ. 340 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த விலையேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதற்கு மண்ணெண்ணையை மானிய விலையில் விற்பனை செய்வதே பிரதான காரணம் என தெரிவித்தார்.
தற்போது செலவினங்களுக்கு இணையான விலைகளுடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள தோட்டத் துறைகளுக்கு நேரடி பண மானியத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. (யாழ் நியூஸ்)