![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt-dKXoT-yEOcIn7lldOmkIMixflmlgYHWC0CHhoZeOvp8ZBy2N-rPHhhZ8K0cBgU2ZKHdFJkNv7GpSgoi1fwoaghl2qxCetgBJqKRo9inhbggFadXnnMv8Gt3UFJm7G0Vd1XsBi1pb9pf3JrJvOl8id5pKl-lB4qjmX44GWHAA1vgXRu_TApuWX-p/s16000/gota.webp)
தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட தடைகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த ஜனாதிபதியல்ல, பதவியை இராஜினாமா செய்து தனது பொறுப்பை கைவிட்ட ஜனாதிபதி, எனவே அவருக்கு முன்னாள் ஜனாதிபதி சிறப்புரிமைகள் கிடையாது என்ற சட்ட வாதத்தின் அடிப்படையிலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்ததுடன், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுமாயின் அதனை நீதிமன்றில் சவால் செய்ய நேரிடலாம், எனவே உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர் இலங்கைக்கு வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், மிரிஹானில் உள்ள தனியார் வீட்டை உரிய முறையில் திருத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)