
காலி முகத்திடலை சுற்றி வளைத்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புகளையும் அழித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது காலி முகத்திடலுக்குச் செல்லும் வீதிகள் இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த வளாகத்திற்குள் யாரும் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாமல் இருந்தது.
காலி முகத்திடலுக்குள்ளும், அப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு அருகிலும் பல போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜூலை 09ஆம் திகதி தாங்கள் ஆக்கிரமித்திருந்த ஜனாதிபதி செயலகத்தை காலி செய்ய தீர்மானித்துள்ளதாக போராட்டக்காரர்கள் அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்த திடீர் சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேறவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து, பாதுகாப்புத் தலைமையகத்தில் சந்தித்துப் பேசிய சில மணி நேரங்களுக்குப் பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
BBC journalist among those who attacked by security forces in Galle Face protest site
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 21, 2022
📸 BBC Tamil Live pic.twitter.com/9xhpB7GhEM
Sri Lankan Military has taken over some parts of the Galle Face protest site forcibly removing protesters pic.twitter.com/NL4MtblMCt
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 21, 2022
Military and Police are forcibly removing tents according to GalleFace protesters
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 21, 2022
📸 Aragalaya FM pic.twitter.com/4JVdO4sYq2
Tense situation reported at Galle Face protest site as Military enters area pic.twitter.com/mtOb6MZdJd
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 21, 2022