தேசிய எரிபொருள் உரிமத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள http://fuelpass.gov.lk ஊடாக மட்டுமே QR குறியீடு பதிவை பெற்றுக்கொள்ளுமாறு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இதேவேளை, தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அது தொடர்பில் கவனமாக இருக்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ் )