கடந்த ஜூலை 13ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களால் திருடப்பட்டதாக கூறப்பட்ட T56 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
ஜூலை 13ஆம் திகதி வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அவ்விடத்தில் கடமையாற்றிய இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்ப்பாளர்களால் தாக்கி T56 ரக துப்பாக்கி திருடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜூலை 23 அன்று, கடற்படை நீர்மூழ்கிக் குழுவினர், தியவண்ணா நீர்த்தேக்கத்தின் பாராளுமன்றம் நோக்கிய ராஜகிரிய சமனல பாலத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் கீழ் மேற்படி கொள்ளையிடப்பட்ட துப்பாக்கியைக் கண்டுபிடித்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)