
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகளும், டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவாக 82 வாக்குகளும், அநுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவாக 3 வாக்குகளும் பதிவாகின.
இன்று 223 வாக்குகள் பதிவாகின. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிக்கவில்லை. 4 வாக்குகள் செல்லுபடியற்றவை.
இதனடிப்படையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகினார்.