
இதனால் இடைக்கால பிரதமராக முஸ்தபா அல் காதிமி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் புதிய பிரதமர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முகமது அல் சூடானி என்பவர் பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் பிரதமராக தேர்வாகலாம் என கூறப்படுகிறது. இதற்கு முக்தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் முற்றுகை
இந்நிலையில் முகது அல் சூடானிக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்ததா அல் சதர் ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இவரது ஆதரவாளர்கள் திடீரென்று பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டியடித்தனர்.
நாடாளுமன்றத்தில் குடியேற்றம்
இருப்பினும் ஏராளமான போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையங்களை தாண்டி நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தனர். மேலும் அவர்கள் நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் மேஜைகளில் படுத்து கிடந்தனர். மேலும் பலர் நாடாளுமன்ற வளாகத்தில் நடனமாடினர். இதுதொடர்பான படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்படி பிரதமர் முஸ்தபா அல்காதிமி கூறியுள்ளார்.மேலும் பாதுகாப்பு படையில் பலமணி நேரம் போராடி நாடாளுமன்றத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றினர்.
வெளியேற்றம்
இருப்பினும் அங்கு தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவி வருகிறது. ஈராக் எண்ணெய் வளமிக்க நாடாக இருந்தாலும் கூட அடிக்கடி அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் தான் தற்போது அரசியல் நெருக்கடி உள்ளது. ஊழல், வேலையின்மை பிரச்சனை உள்ளது. மேலும் அரசின் சேவை நடவடிக்கைகளின் குறைபாட்டால் மக்கள் கோபத்தில் உள்ளனர். முன்னதாக கடந்த 2016ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் கடந்த 2019ல் மக்கள் போராட்டம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.