
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் வழியாக சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மாலைதீவு அதிகாரிகளை மேற்கோள்காட்டி 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
பல மாதங்களாக இடம்பெற்ற போராட்டங்கள் வலுப் பெற்றதால், நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவை அடைந்து, பின்னர், புதன்கிழமை தனது இராஜினாமாவை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை தவறவிட்டார்.
ராஜபக்ஷ சவூதி அரேபிய ஏலைன்ஸ் விமானத்தில் தற்போது சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.