
இவரை கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட விதம் அடங்கிய காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபணத்துக்குள் பிரவேசித்தமை மற்றும் ஒளிபரப்பை சீர்குலைக்க முயற்சித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.
தனிஸ் அலிக்கு எதிராக கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜூலை 22ஆம் திகதி பிடியாணை பிறப்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது(யாழ் நியூஸ்)
