ஆர்பாட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்கு இன்னும் கட்டணம் செலுத்தப்படவில்லை!
Close
advertise here on top
advertise here on top
happy kids fun world

ஆர்பாட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்கு இன்னும் கட்டணம் செலுத்தப்படவில்லை!

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்காக செலுத்த வேண்டிய தொகையை இலங்கை  காவல்துறை இன்னும் செலுத்தவில்லை.

இந்த போராட்டத்தின் போது பொலிஸாரால் பாரியளவிலான தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீர் பீரங்கிகளை இயக்குவதற்கான தண்ணீரைப் பயன்படுத்தியதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு பொலிஸ் திணைக்களம் இன்னும் பணம் செலுத்தவில்லை என பொலிஸ் அதிகாரி மேலும் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, பொலிஸ் நிலையங்களின் வெளியூர்களில் இருந்து கொழும்புக்கு கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், கொழும்பு பொலிஸ் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான கண்ணீர் புகை குண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

"எனவே, மற்ற பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களை தங்கள் இருப்புக்களை கொழும்புக்கு அனுப்புமாறு நாங்கள் கேட்க வேண்டியிருந்தது" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.