நேற்று (26) இரவு 9.00 மணி நிலவரப்படி 04 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக பதிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
299 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் நிரப்பு நிலையங்களும் 34 லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (LIOC) எரிபொருள் நிலையங்களும் நேற்று QR முறையை முழுமையாக சோதனை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மொத்தமாக 92,845 பரிவர்த்தனைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தேசிய எரிபொருள் சீட்டு மாத்திரம் அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இலங்கையில் மொத்தம் 7.5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவை நாளாந்த அடிப்படையில் இயங்குகின்றன. இதில் 4.2 மில்லியன் மோட்டார் சைக்கிள்கள், 1.1 மில்லியன் முச்சக்கர வண்டிகள் மற்றும் 877,341 கார்கள் என பதிவாகியுள்ளன. எனினும் நேற்றைய நிலவரப்படி 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் மட்டுமே தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)