முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தனது தங்கியிருக்கும் காலத்தை நீடிக்கவுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக அங்கு சென்ற நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட அவரது குறுகிய கால விசாவை, மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்று (26) செய்தியாளர்களிடம் கூறியதையடுத்து இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)