
மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எதிர்காலத்தில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற இலங்கை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அவ்வாறான வேலைத்திட்டம் உள்ளதா என்பதை இன்னும் சில நாட்களில் கூறமுடியும் எனவும் அது அவரால் முடியாமல் போனால், தனது பணிகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரதன தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். (யாழ் நியூஸ்)