
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 13,200 லீற்றர் எரிபொருள் மாத்திரமே வெளியிடுவதாக அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித குறிப்பிடுகின்றார்.
தேவைக்கேற்ப போதிய எரிபொருள் தொகையை வழங்காமல் வரிசையை நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)