முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்துச் சென்றவரை தேடும் பொலிஸார்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்துச் சென்றவரை தேடும் பொலிஸார்!


கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்துச் சென்ற நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நபர் ஒருவர் குறித்த கொடியை பெட்ஷீட்டாகப் பயன்படுத்தி அந்த படுக்கையில் படுத்திருந்தது வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அதில் அவர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தீயிட்டு அழிப்பதாக கூறியதாகக் கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் கொடியை எடுத்துச் சென்ற நபர் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காணக்கூடியதாகத் தெரிவித்த பொலிஸார், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.