முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்ற நோட்டீஸ்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்ற நோட்டீஸ்!


நாட்டையும் மக்களையும் திவால் நிலைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நோட்டீஸ் அனுப்ப இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

மேற்படி மனுக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது. 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.