அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கோட்டா முறையின் நோக்கம் குறைந்த எரிபொருளை வெளியிடுவதே என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பொதுமக்கள் அதற்கேற்றவாறு தமது தேவைகளை மாற்றியமைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னதாக ஒவ்வொரு வாகனத்திற்கும் எந்த அளவு எரிபொருள் வெளியிடப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
தனது தொழிற்சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்தார். (யாழ் நியூஸ்)